தனியார் இ--சேவை மையங்களில் மீண்டும் கட்டண கொள்ளையால் அதிர்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உட்பட, 16 இடங்களில் நேரடியாக அரசு இ--சேவை மையங்களும், பல்வேறு இடங்களில் உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்களும் செயல்படுகின்றன.இதில் அரசு தவிர, தனியார் இ--சேவை மையங்களில் அரசு நிர்ண-யித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் இ-சேவை மையங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரித்திருந்தார். இதனால் அரசு இ-சேவை மையங்களில் வசூலிக்கப்படும் கட்ட-ணத்தையே வசூலித்தனர். இந்நிலையில் தனியார் இ-சேவை மையங்களில், மீண்டும் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்-சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: அரசு இ--சேவை மைய கட்-டணத்தை விட, நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்-றனர். இதுகுறித்து கேட்டால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து உரிமம் பெற்றுள்ளோம் என்கின்றனர். நாங்களும் வேறு வழியின்றி கேட்கும் பணத்தை கொடுக்கும் நிலை உள்ளது. மீண்டும் எச்சரிக்கை விடுக்காமல், ஒரு சில மையங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான், கூடுதல் கட்டணம் வசூலிப்பது முடிவுக்கு வரும். கலெக்டர் ஆய்வு செய்து, நடவ-டிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மக்கள் கூறினர்.