உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூர் ஒன்றியத்தில் திட்டப்பணி துவக்கம்

நம்பியூர் ஒன்றியத்தில் திட்டப்பணி துவக்கம்

நம்பியூர், கோபி தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஒன்றியத்தில், எம்.எல்.ஏ, மேம்பாட்டு நிதியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. அ.தி.மு.க., ஒன்றிய முன்னாள் செயலாளர் தம்பி சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.பி., சத்தியபாமா, நம்பியூர் முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, எலத்துார் பேரூராட்சி முன்னாள் செயலாளர்கள் கருப்பணன், சேரன், சரவணன் முன்னிலை வகித்தனர்.எம்.எல்.ஏ., செங்கோட்டையன், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதன்படி கோசணம் ஊராட்சியில் நிழற்கூடம், நம்பியூர் பேரூராட்சியில் 7 மற்றும் 12வது வார்டு பகுதியில் குடிநீர் தொட்டி, தார்ச்சாலை அமைத்தல், எலத்துார் பேரூராட்சியில் குளத்துக்கு கான்கிரீட் வடிகால் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை, பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ