உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.3.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ஈரோடு, ஜன. 3-ஈரோடு மாநகராட்சி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளில், 3.15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.மாநகராட்சிக்கு, 44வது வார்டு பெரியார் நகர் இ-பிளாக் பகுதியில், 390 மீட்டர் நீளத்துக்கு குடிநீர் பகிர்மான குழாய் பதித்தல், வார்டு-27 கண்ணையன் வீதியில், கான்கிரீட் சாலை, வார்டு-16 பட்டேல் வீதியில், கான்கிரீட் சாலை அமைத்தல், வார்டு, 40 பச்சையப்பா வீதியில், கான்கிரீட் தளம் அமைத்தல் உட்பட 1.29 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சார்பில், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மேற்கூரையை திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.பி.,க்கள் ஈரோடு பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சரஸ்வதி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை