உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அமைச்சர் பொன்முடியை கண்டித்துபெருந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடியை கண்டித்துபெருந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெருந்துறை:ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், அமைச்சர் பொன்முடியை கண்டித்து, பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் முன்னிலை வகித்தார். பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்ராஜ் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கருப்பணன், அமைப்பு செயலாளர் சிவசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் பொன்முடியின் அநாகரீக பேச்சுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுத்துரை, பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் அருணாச்சலம், நகர செயலாளர்கள் கல்யாண சுந்தரம், பழனிச்சாமி, சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ