உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஈரோடு,ஈரோடு மாவட்டம், வடமுகம் வெள்ளோடு பஞ்., உட்பட பல்வேறு இடங்களில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு பெறப்பட்ட மனுக்கள், பதிவு செய்த முறை, மக்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். நேற்று பெறப்பட்ட மனுவில், ஒரு நபருக்கு பட்டா மாறுதல், ஒரு ஜாதிச்சான்று, ஒருவருக்கு தொழிலாளர் நலவாரிய அட்டை உள்பட, 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். தொடர்ந்து மொடக்குறிச்சி எல்லக்கடை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த முகாமை ஆய்வு செய்தார். ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சல் சவுத்ரி, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை