உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கோபி: கோபி அருகே வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், 82 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வழங்கினார். இதேபோல் பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 148 மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க., நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், கவுன்சிலர்கள் சென்னியப்பன், தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை