உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் மனு

குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் மனு

அந்தியூர்:அந்தியூர் யூனியன் அலுவலகத்தில், துணை பி.டிஓ., சக்திவேலிடம், வேம்பத்தி ஊராட்சி, மாலாகோவில் தோட்டத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டவர்கள், குடிநீர் வசதி கேட்டு மனு வழங்கினர்.அதில் கூறியுள்ளதாவது;வேம்பத்தி ஊராட்சி, மாலாகோவில் தோட்டம் பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு, 30 நாட்களுக்கும் மேலாக, சீரான குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால், 5 கி.மீ., துாரத்திலுள்ள ஆப்பக்கூடலுக்கு சென்று குடிநீர் கொண்டு வரும் நிலையுள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட ஆற்று குடிநீர் வினியோகிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை