மேலும் செய்திகள்
பள்ளிகளில் காலாண்டு தேர்வு துவங்கியது
17-Sep-2026
ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு கடந்த, 16ல் துவங்கியது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 17ல் துவங்கியது. அனைத்து வகுப்புகளுக்கும் நேற்றுடன் காலாண்டு தேர்வு நிறைவடைந்தது. இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் வரும் அக்.,5ல் திறக்கப்படவுள்ளன.இந்த விடுமுறை நாட்களில் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
17-Sep-2026