உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:அகில இந்திய ரயில்வே லோகோ பணியாளர் சங்கத்தினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். புட் பிளேட்டிங் ஆய்வின்போது அதிகாரி பொறுப்பற்ற நடத்தையையும், மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில்அமர்த்துவதை கைவிட வேண்டும். லோகோ பைலட்களின்(ரயில் டிரைவர்கள்) பதவி உயர்வு வாய்ப்புகளை குறைக்க கூடாது. நிலுவையில் உள்ள அனைத்து பணியிட மாற்றம் விண்ணப்பங்களையும் பரிசீலக்க வேண்டும். சரக்கு ரயில் பணிக்குழுவினரை பணி முடிந்தவுடன் உடனடியாக விடுவிக்க வேண்டும். தகுதியான லோகோ பைலட்களின் பட்டியலில் இருந்து சி.ஆர்.சி., களை நியமிப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள், ரயில் டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை