உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே தொழிற்சங்க தேர்தல்: சாதனை விளக்க பிளக்ஸ் பேனர்

ரயில்வே தொழிற்சங்க தேர்தல்: சாதனை விளக்க பிளக்ஸ் பேனர்

ரயில்வே தொழிற்சங்க தேர்தல்: சாதனை விளக்க பிளக்ஸ் பேனர்ஈரோடு, நவ. 21-ரயில்வே தொழிற்சங்க தேர்தலை முன்னிட்டு, சங்க சாதனைகளை விளக்கி, ஈரோட்டில் தொழிற்சங்கங்கள் சார்பில் பிள க்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர்.ரயில்வே தொழிற்சங்கத்துக்கான தேர்தல் டிச.,4, 5ல் நடக்கிறது. தொழிற்சங்க நிர்வாகிகள், ரயில்வே ஊழியர்களை கவர்ந்து அவர்களது ஓட்டுகளை பெற்று வெற்றி பெற, தீவிர பிரசாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள டீசல் லோகோ ஷெட் முன்புறம், டி.ஆர்.இ.யு. (தட்சின ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்), மற்றும் எஸ்.ஆர்.எம்.யு. (சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்) சார்பில், சாதனை விளக்க பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.தொழிலாளர்கள் நலனுக்காக பெற்று கொடுத்த சலுகை கள், நன்மைகள் குறித்து தொழிற்சங்கங்கள் சாதனை விளக்க பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். மேலும் தங்கள் சங்கங்கள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் நபர்கள், எந்த பகுதிக்காக போட்டியிடுகின்றனர் என்பது குறித்த விபரங்களையும் அதில் இடம் பெற செய்துள்ளனர். ஈரோடு டீசல் லோகோ ஷெட் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தேர்தலில் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால், தொழிலாளர்களை கவரும் விதமாக சாதனை விளக்க பிளக்ஸ் பேனர்களை தொழிற்சங்கத்தினர் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ