பலத்த காற்றுடன் மழை வாழை மரங்கள் சேதம்
கோபி:கோபி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு, வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.கோபி அருகே சிறுவலுார் பஞ்., பகுதியில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் மழை பெய்தது. சிறுவலுார் அருகே மல்லநாயக்கனுாரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, தன்னுடைய நிலத்தில், 1,000 செவ்வாழைத்தார் ரக வாழைகளை சாகுபடி செய்திருந்தார்.பலத்த காற்றுடன் பெய்த மழையால், 800 வாழை மரங்கள் முறிந்து நாசமாகி விட்டனது. வாழை சேதம் குறித்து, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.