உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பீடி சுற்றும் தொழிலாளருக்கு ரம்ஜான் போனஸ் அறிவிப்பு

பீடி சுற்றும் தொழிலாளருக்கு ரம்ஜான் போனஸ் அறிவிப்பு

ஈரோடு:ஈரோடு வி.பி.ஆர்., காலேஜ் பீடி கம்பெனிக்கும், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்துக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கான ரம்ஜான் போனஸ் உடன்படிக்கையா-னது.வரும், 21ல் ரம்ஜான் பண்டிகை கொண்ட உள்ளனர். முன்னதாக ஏ.ஐ.டி.யு.சி., கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு வி.பி.ஆர்., கம்பெனி நிர்வாகத்துடன் போனஸ் இதர கோரிக்கை பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த, 2025-26ம் ஆண்டுக்கான போனஸாக அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்க-ளுக்கும், 1,000 பீடிகளுக்கு, 37 ரூபாய் வீதம் கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும். இத்தொகையை ஓரிரு நாளில் வழங்குவது. இது கடந்தாண்டை-விட, 1,000 பீடிகளுக்கு, 3 ரூபாய் கூடுதலாகும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தினமும் குறைந்தபட்சம், 1,000 பீடிகள் சுற்றுவதற்கு தேவையான இலை, துாள் வழங்க கோரிக்கை முன்வைத்து ஏற்கப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர் பயன் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !