உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடிமலையில் ரேஷன் கடைகள் திறப்பு

தாளவாடிமலையில் ரேஷன் கடைகள் திறப்பு

சத்தியமங்கலம்: நீலகிரி எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகு-தியில், கொங்கள்ளி, சோளகர் தொட்டியில் நடமாடும் ரேசன்-கடை, திகினாரை, தாளவாடியில் புதிய ரேசன் கடைகளை எம்.பி., ராஜா, நேற்று திறந்துவைத்தார்.தாளவாடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒசூர் ரோட்டை தார்ச்சாலையாக அமைக்க, 4.50 கோடி ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திங்களூர் ஊராட்சி காடட்டி, பாசக்குட்டையில் பயணிகள் நிழற்கூடம், குத்தியா-லத்துார் ஊராட்சி ஏலஞ்சி, கே.என்.பாளையம் சதுமுகை ஊராட்சி சின்னட்டிபாளையம் பகுதிகளில் ரேசன் கடைகளை திறந்து வைத்தார்.சத்தியமங்கலத்தில் உள்ள எம்.பி., அலுவலகத்தில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, 214 துாய்மை பணி-யாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை