உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உடலை புதைத்த உறவினர்கள்

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உடலை புதைத்த உறவினர்கள்

அந்தியூர்: அந்தியூர் அருகே மேட்டூரை சேர்ந்தவர் குருசாமி, 53; இவர் நேற்று இறந்து விட்டார். உடலை அடக்கம் செய்வதற்காக, அப்பகுதி ஓடை புறம்போக்கு நிலத்துக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஓடை புறம்போக்கில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம், 2023ல் உத்தரவிட்டிருந்தது.இதை மீறி அடக்கம் செய்ய வந்தவர்களை, அந்தியூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் உடலை புதைத்து சென்றனர். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சடலத்தை புதைத்த, 10 பேர் மீது வருவாய் துறையினர் அளித்த புகாரின்படி, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி