மேலும் செய்திகள்
மானாமதுரை வாரச்சந்தையில் திருட்டு
18-Apr-2025
புன்செய்புளியம்பட்டி புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தை மேம்பாடு குறித்த, கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, புன்செய் புளியம்பட்டி நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கை:புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் உள்ள, வாரச்சந்தையை மேம்படுத்துவதற்காக, தமிழக அரசு மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான, வியாபாரிகளின் கருத்துகளை கூறும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் வரும் 21 மதியம் 12:00 மணிக்கு, பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஆகவே, அனைத்து வியாபாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு, கருத்துகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
18-Apr-2025