உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜே.சி.பி., வாகனத்தை திருடியவருக்கு காப்பு

ஜே.சி.பி., வாகனத்தை திருடியவருக்கு காப்பு

அந்தியூர், அந்தியூரை அடுத்த நகலுார், முனியப்பன்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 27; ஜே.சி.பி., உரிமையாளர். பிரம்மதேசம் தனியார் மண்டபம் அருகில், ஜே.சி.பி.,யை சாவியுடன் நிறுத்தியிருந்தார். நேற்று குடிபோதையில் சுற்றித்திரிந்த குருவரெட்டியூர் பெரியார் நகர் முருகேசன், 30, ஜே.சி.பி.,யை திருடி அந்தியூரை நோக்கி ஓட்டி சென்றார். அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த டிராபிக் எஸ்.எஸ்.ஐ., மெய்யழகன், வாகனத்தை நிறுத்தி விசாரித்தார். இதில் திருடி சென்றது தெரியவந்தது. ஜே.சி.பி.,யை கைப்பற்றி முருகேசனை கைது செய்தார். பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரவணன் மீது ஆப்பக்கூடல் போலீசில், திருட்டு வழக்கு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி