உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வருவாய் துறையினர் 2வது நாளாக ஸ்டிரைக்

வருவாய் துறையினர் 2வது நாளாக ஸ்டிரைக்

ஈரோடு, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் நேற்று முன்தினம் முதல், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார், வருவாய் அலுவலக உதவியாளர் என மாவட்டத்தில், 480 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஆய்வு கூட்டங்கள், தாலுகா அலுவலகங்களில் நடக்கும் சான்றிதழ் வழங்குதல் உட்பட பல்வேறு பணி பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ