உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரிசி ஆலை உரிமையாளர் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று, நாளை நடக்கிறது

அரிசி ஆலை உரிமையாளர் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று, நாளை நடக்கிறது

ஈரோடு, ஜன. ௩-தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு, கருத்தரங்கம் மற்றும் சிறப்பு கண்காட்சி, ஈரோடு முத்து மகாலில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கிறது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். மாநில தலைவர் துளசிமணி தலைமை வகிக்கிறார். சங்க ஆலோசகர் ஜெகதீசன், கவுரவத்தலைவர் சக்திவேல், செயலாளர் பரணிதரன், பொருளாளர் இராம அருணாச்சலம் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், சக்ரபாணி, செந்தில்பாலாஜி, ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, பேட்டியா தலைவர் ராஜமாணிக்கம் பங்கேற்கின்றனர். முன்னணி நிறுவனங்களின் அரிசி ஆலை இயந்திரங்கள், உபகரணங்கள் கண்காட்சி நடக்கிறது. இதை தொடர்ந்து கருத்தரங்கு நடக்கிறது. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !