அரிசி ஆலைகள் வரும் 29ல் வேலை நிறுத்தம்
அரிசி ஆலைகள் வரும்29ல் வேலை நிறுத்தம்ஈரோடு, நவ. 28-கட்டடங்கள், குடோன்களுக்கான வாடகை மீதான ஜி.எஸ்.டி., வரி விதிப்பை திரும்ப பெறக்கோரி வரும், 29ல் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளன.இதுபற்றி, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் ஈரோடு துளசிமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: வணிக நிறுவனங்களுக்கான கட்டடம், குடோன்களின் வாடகை மீது, ஜி.எஸ்.டி., கவுன்சில், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை புதிதாக விதித்து அமலாக்குவதை எதிர்க்கிறோம். அதனை உடன் திரும்ப பெற வேண்டும். உள்ளாட்சி நிர்வாகம் மூலம் உயர்த்திய சொத்து வரி உயர்வையும், மின்வாரியம் உயர்த்தி உள்ள அதிகப்படியான மின் நுகர்வு கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 29 ல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.