உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.88 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி

ரூ.3.88 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி

காங்கேயம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்துார் பேரூராட்சி பகுதிகளில், பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடுநகர் புறசாலை மேம்பாட்டு திட்டத்தில், 3.88 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்வுகளில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி