ரூ.1.50 லட்சம் பறிமுதல் -
காங்கேயம்:காங்கேயம் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், பாப்பினி-நத்தக்காடையூர் சோதனைச்சாவடி அருகே நேற்று காலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாப்பினி பஞ்., மடவிளாகம் பகுதி கார்த்தி கேயன், காரில் வந்தார். வேலி அமைக்கும் தொழில் செய்யும் அவரிடம், 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லா-ததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.