மேலும் செய்திகள்
திருக்கோவிலுாரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்
21-Mar-2026
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி-கொளத்துார் ரோட்டில், அந்தியூர் தொகுதி தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சேலம் மாவட்டம் கொளத்துாரை சேர்ந்த சென்னப்பன், 50; மாடு விற்று, உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 80 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் பர்கூர் அருகே கர்கேகண்டிசெக்போஸ்டில், ஜெயராஜ் தலைமையிலான பறக்கும் படை-யினர் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்தியூரிலிருந்து தோஸ்த் வண்டியில் வந்த, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்காய வியா-பாரி சக்திவேலிடம், 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
21-Mar-2026