மேலும் செய்திகள்
போதையில் மயங்கி விழுந்த முதியவர் பலி
3 minutes ago
வருகின்றனர்.போதை மாத்திரை மேலும் 2 பேர் கைது
3 minutes ago
மயங்கிய டிரைவர் உயிரிழப்பு
4 minutes ago
வேன் மோதியதில் பெண் பலி
4 minutes ago
தாராபுரம்:தாராபுரம் அருகே, 60 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க வெள்ளி பொருட்களை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சுகன்யா தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று, தாராபுரம், உடுமலை சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகாவீர்சிங்,42, ஓட்டிச் சென்ற காரை சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி, 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 23 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, அப்பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதை, தாராபுரம் தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago
4 minutes ago