பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
ஈரோடு: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் மஞ்சள், கரும்பு, பொங்கல் பானை உள்ளிட்ட, பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது.இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக, தை முதல் தேதி பொங்கல் விழா நடக்கிறது. இதன்படி நாளை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி சூரி யன் நகர துவங்கும் நாளே (உத்ராயணம்) தை முதல் தேதியாகும். இந்நிலையில் தை பொங்கல் களை கட்ட துவங்கி உள்ளது. பொங்கலுக்கு பிரதானமான மஞ்சள் ஒரு ஜோடி கொத்து, 40 முதல் 60 ரூபாய், கரும்பு ஜோடி, 80 முதல், 100 ரூபாய்க்கு விற்றது. இன்று போகி பண்டிகை கொண்டாடப்படு-வதால், காப்புக்கட்டு எனப்படும் நிகழ்வுக்காக, பூளைப்பூ, ஆவாரம் பூ, வேப்பிலை கொண்ட ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்-கப்பட்டது. கிராக்கியை பொறுத்து விலை ஏறி, இறங்கியது. இதேபோல் பொங்கல் வைக்க தேவையான பானைகள் பல வண்-ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 50 ரூபாய் தொடங்கி பல விலைகளில் விற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களை வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனையால், மாநகர் களை கட்டியுள்ளது. சிலர் புதிய பொங்கல் பானையை, பாத்திர கடைகளில் வாங்கி சென்-றனர்.