மேலும் செய்திகள்
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
11-Jun-2025
ஈரோடு, ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை ஜவுளி சந்தை நடந்தது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கடைக்காரர்கள், வியாபாரி கள், மக்கள் குறைந்த அளவே துணிகளை வாங்க வந்திருந்தனர்.மொத்த ஜவுளி விற்பனை மிகவும் குறைவாகவே இருந்தது. வழக்கமாக சில்லறை ஜவுளி விற்பனையாக துண்டு, வேட்டி, லுங்கி, நைட்டி, சேலைகள், பெட்ஷீட், பெட்ஸ்பிரட் உட்பட உள்ளாடைகள், காட்டன் துணிகள் அதிகம் விற்கும்.ஆனால் நேற்று சில்லறை விற்பனையும் மிகவும் குறைந்த அளவே நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
11-Jun-2025