உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குச்சிக்கிழங்கு மில்லில் சுகாதார நடவடிக்கை

குச்சிக்கிழங்கு மில்லில் சுகாதார நடவடிக்கை

பவானி: அம்மாபேட்டை அருகே பூனாச்சியில் குச்சிக்கிழங்கு மில்லில், கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர் இருவர், எலி காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டது. இருவரும் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் ஒலகடம் அரசு மருத்துவ குழுவினர், மாவட்ட மலேரியா அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் தலைமையில், மில்லில் நேற்று சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. கொசுப்புழு ஒழிப்பு, கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை செய்தனர். அங்குள்ள தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்தனர். இப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் காய்ச்சல் கண்காணிப்பு முகாம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ