துாய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் கிளை தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முகம் சிறப்புரையாற்றினார். பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றும் குழு பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். குழு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ், 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.