மேலும் செய்திகள்
கொழுப்பை கரைக்கும் ‘குள்ளஜோர்’ ரக கேழ்வரகு
22-Sep-2026
கோபி: கேழ்வரகு சாகுபடி குறித்து, கோபி வேளாண் அறிவியல் நிலை-யத்தின் விஞ்ஞானிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.சிறுதானிய பயிர்களில் கேழ்வரகு பயிரானது, மானாவாரி மற்றும் மலைப்பகுதி விவசாயிகளால், அதிகளவில் சாகுபடி செய்-யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 4,000 ெஹக்டேர் பரப்ப-ளவில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையத்தின் மூலம் கால்சியம் மற்றும் இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட கேழ்-வரகு ரகங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அந்தியூர், பர்கூர் அருகே கொங்காடை என்ற இடத்தில், கேழ்வரகு சாகுபடி செய்யும் முறையை, கோபி வேளாண் அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசன் தலைமையில், குழுவினர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டு, கேழ்-வரகு சாகுபடி குறித்து பார்வையிட்டனர். அப்போது விஞ்ஞானி சரவணக்குமார் உடனிருந்தார்.
22-Sep-2026