ஓடும் ரயிலில் திருடிய செக்யூரிட்டி கைது
ஈரோடு:கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் அபினவ், 26; கொல்லம்-ஹூப்ளி இடையிலான ரயிலில் முன்பதிவு பெட்டியில் நேற்று அதிகாலை பயணித்தார். மொபைல்போனை சார்ஜரில் போட்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது மாயமானதுதெரியவந்தது.ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே போலீசார் ஸ்டேஷனில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் ரயிலில் வந்து இறங்கிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். மொபைல்போனை திருடியதை ஒப்பு கொண்டார். நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த ஸ்ரீதர், 52; திருப்பூரில் செக்யூரிட்டியாக வேலை செய்ததும் தெரியவந்தது. மொபைல்போனை மீட்ட போலீசார், அவரை கைது செய்தனர்.