உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சிஈரோடு, நவ. 28-ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 'உன் கல்வியின் நோக்கம் என்ன?' என்ற தலைப்பில் தன்னம்பிக்கை உரை, கஸ்துாரிபா கலையரங்கில் நடந்தது.வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்து அறிவுத்திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசினார். தாளாளர் மற்றும் செயலாளர் சந்திரசேகர், வாழ்க்கையில் வெற்றி யின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். முனைவர். ஜெயராமன் வாழ்வியல் கல்வி குறித்து பேசினார். முனைவர். ஈஸ்வரமூர்த்தி வரவேற்று பேசினார். ஊக்கமளிப்பு பேச்சாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாளராக பங்கேற்று, 'கல்வியின் நோக்கத்தை மனதில் நிலைநிறுத்தி, மாணவர்கள் தம் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். உத்வேகம், புதுப்பித்தல், படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் தெளிவான பேச்சாற்றல் ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும்' என்று ஊக்கப்படுத்தி பேசினார்.யுவராஜா மற்றும் பாலசுப்பிரமணியம் அறக்கட்டளை உறுப்பினர்கள், பெரியசாமி நிர்வாக மேலாளர் மற்றும் துறை தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். லலிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை