உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தே.மு.தி.க., நிர்வாகி மனைவியிடம் ஏழு பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

தே.மு.தி.க., நிர்வாகி மனைவியிடம் ஏழு பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

ஈரோடு, ஈரோடு, முத்தம்பாளையம், ஹவுசிங் யூனிட்-2ல் வசிப்பவர் பசும்பொன் பிரகாஷ். தே.மு.தி.க., நிர்வாகி. இவர் மனைவி ஜஸ்விந்த ராணி, 42; டீச்சர்ஸ் காலனியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே டீக்கடை நடத்துகிறார். ஈரோடு மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு டூவீலரில் வீட்டுக்கு, நேற்றிரவு, ௮:௧௫ மணிக்கு திரும்பினார்.சென்னிமலை சாலை தொழிற்பேட்டை அருகே இருட்டான பகுதியை கடக்க முயன்றபோது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரில் ஒருவன், அவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச்சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறிக்க, நகையுடன் பைக் தப்பியது. ஜஸ்விந்த ராணியும், அங்கிருந்து மக்களும் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் தப்பி விட்டனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ