உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் சாலையில் ஓடும் கழிவுநீர்; கண்டுக்காத நகராட்சி

காங்கேயத்தில் சாலையில் ஓடும் கழிவுநீர்; கண்டுக்காத நகராட்சி

காங்கேயம், :காங்கேயம் நகராட்சி பங்களாபுதுார் சாலையில், கழிவுநீர் செல்ல புதிதாக சாக்கடை அமைக்கப்பட்டது. இதில் ஆங்காங்கே சிலர் செயற்கையான அடைப்பு ஏற்பத்தியுள்ளனர். இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் குளம் போல் தேங்கியுள்ளது. சாலையில் நீண்ட துாரம் வழிந்தோடுகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிவு நீரால் கொசு அதிகரித்து, பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சாலை அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து வருகிறது. பல மாதங்களாக இந்நிலைய உள்ளது. நகராட்சி நிர்வாகம் மேலும் மெத்தனம் காட்டாமல், உடனடி நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ