உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

ஈரோடு :ஈரோட்டில் கல்லுாரி, பள்ளி என்.சி.சி., மாணவர்களுக்கு, துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை கையாளுதல் பற்றிய பயிற்சி வகுப்பு, சிக்கையா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. இதில் பல்வேறு கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் என, 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுபேதார் மேஜர் கோவிந்தராவ் தலைமையிலான ராணுவ வீரர்கள் பயிற்சி அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை சிக்கையா அரசு கலை அறிவியல் கல்லூரி என்.சி.சி., அதிகாரி மேஜர் மகுடீஸ்வரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி