மேலும் செய்திகள்
தடுப்பு இல்லாத வளைவு அச்சத்தில் வாகன ஓட்டிகள்
19-Jan-2025
பவானி; ஈரோடு-பவானியை இணைக்கும் வகையில், 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் அருகில், 25 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுற கான்கிரீட் தடுப்புகள் பெரும்பாலான பகுதிகளில் சேதமடைந்தும், கான்கிரீட் பெயர்ந்தும் கம்பி வெளியே தெரிகிறது. கனரக வாகனங்கள் செல்லும்போது, அதிர்வுகளால் இடிந்து விழும் நிலை இருந்தது. இதனால் பாலத்தில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே கடந்து சென்றனர். பாலத்தின் பக்கவாட்டு கான்கிரீட் தடுப்புகளை புனரமைக்க மக்கள் வலியுறுத்தினர். இதன்படி பவானி நகர்மன்றத் தலைவர் சிந்துாரி, முதல்வர் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பினார். இதை தொடர்ந்து ஈரோடு-பவானி- மேட்டூர் -தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டப்பணியோடு சேர்த்து, சேதமடைந்த கான்கிரீட் தடுப்புகளும் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதை நகர்மன்றத் தலைவர் சிந்துாரி பார்வையிட்டார்.
19-Jan-2025