மேலும் செய்திகள்
காங்., கையெழுத்து இயக்கம்
08-Oct-2025
புன்செய்புளியம்பட்டி பீஹாரில் வாக்கு திருட்டு நடந்தததாக கூறி, காங்., சார்பில், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, காந்தி சிலை முன், காங்., கட்சி எஸ்.சி., பிரிவு சார்பில், கையெழுத்து இயக்க பேரணி மாநில துணைத்தலைவர் காந்தி தலைமையில் நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர் சங்கர், காங்., மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ரஞ்சன் குமார், தொடங்கி வைத்தார். சத்தி சாலை, பவானிசாகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று மக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
08-Oct-2025