உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுபாலம் கட்டும் பணியில் மந்தம் தவிட்டுப்பாளையத்தில் தடுமாற்றம்

சிறுபாலம் கட்டும் பணியில் மந்தம் தவிட்டுப்பாளையத்தில் தடுமாற்றம்

அந்தியூர்: அந்தியூரிலிருந்து அத்தாணி செல்லும் பிரதான சாலையில், தவிட்டுப்பாளையம் பாலம் அருகில், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கும். தேங்கும் மழைநீரை வெளி-யேற்ற, வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்க, மாநில நெடுஞ்சா-லைத்துறை சாலை மேம்பாட்டு திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரோட்டின் ஒரு பகுதி பணி நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு மாதமாக மற்றொரு பகுதியில் வேலை நடந்து வருகிறது. எப்போதும் போக்குவரத்து உள்ள சாலை என்பதால், சிறுபாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்-துள்ளது. குறிப்பாக, காலை, மாலை மற்றும் சந்தை நாளான திங்-கட்கிழமை போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. பணி மந்த-மாக நடப்பதால் வயதானவர்களும், பள்ளி சிறுவர்களும் இப்பகு-தியை கடக்க சிரமப்படுகின்றனர். சிறுபாலம் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி