மகன் மாயம்: தாய் புகார்
ஈரோடு:ஈரோடு சென்னிமலை ரோடு ஈ.எம்.எம். முதலாவது வீதியை சேர்ந்தவர் பத்மநாபன், 49; சமையல் வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்தார். கடந்த, 7ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பத்மநாபன் தாய் பத்மினி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.