உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணிக்கு திரும்பிய எஸ்.பி., அலுவலக ஊழியர்

பணிக்கு திரும்பிய எஸ்.பி., அலுவலக ஊழியர்

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலக நிர்வாக அதிகாரி ரகு மீது, காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர், பாலியல் உள்ளிட்ட புகார்களை, எஸ்.பி.,யிடம் சில மாதத்துக்கு முன் அளித்தனர். அதன் மீதான விசாரணையை தொடர்ந்து, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேசமயம் புகார் தெரிவித்த சங்கத்தை சேர்ந்த ஏழு பணியாளர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். பணியாளர்களின் உத்தரவை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவு, 7:00 மணிக்கு மேல் பணி செய்ய உத்தரவிடுவதை கைவிடக்கோரி, காவல்துறை அமைச்சு பணியாளர்கள், ௧௭, ௧௮ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டத்தை ஒத்தி வைத்து பணிக்கு திரும்பினர். இதுகுறித்து காவல்துறை அமைச்சு பணியாளர் சங்க கிளை தலைவர் முத்துகுமாரலிங்கம் கூறியதாவது: சென்னையில் சங்க மாநில நிர்வாகிகளுடன், போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததால், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை