பழங்குடியினர் சிறப்பு முகாம்
தாராபுரம், தொல்குடி திட்டத்தின் கீழ், பழங்குடியினருக்கான சிறப்பு முகாம், தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சார்ந்த பழங்குடியினருக்கு, மருத்துவ சோதனை மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டப்பதிவு தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர் அட்டை, ஜன்தன் வங்கி கணக்கு துவக்குதல் போன்றவற்றுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. மருத்துவம், தேர்தல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் முகாமில் முகாம் ஏற்பாடுகளை, வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி செய்திருந்தார்.