உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூத்த தம்பதியருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்வு

மூத்த தம்பதியருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்வு

ஈரோடு, மூத்த தம்பதியருக்கு, கோவில் சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்வுக்கு விண்ணப்பிக்க, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறநிலையத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில், மூத்த தம்பதியருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இதுகுறித்து, அறநிலையத்துறை அமைச்சர் ஏற்கனவே சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதன்படி மணிவிழா கண்ட, 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள தம்பதியருக்கு, கோவில் சார்பில் சிறப்பு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள தம்பதியர், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான விளம்பர பதாகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ