சிறப்பு மருத்துவ முகாம்
ஈரோடு: மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், ஈரோடு மாநகராட்சி சார்பில், ௧3வது வார்டு பகுதிகளில் நேற்று நடந்தது. மல்லி நகர், நெசவாளர் காலனி, சு.க.வலசு, சின்னவலசு, ஆயில் மில் ரோடு, கரும்பு தோட்டம் பகுதிகளில் நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 500க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல் மற்றும் இதர உபாதை கண்டறியப்படுவோர், மேல் சிகிச்சை தேவைப்படும் நிலையில், அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவர் என, சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறினார்.