உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி

ஈரோடு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வரும், ௮ம் தேதி, பேச்சு போட்டி ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசா என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றில் பேச வேண்டும். மாவட்ட அளவில் பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 5,௦௦௦ ரூபாய்; இரண்டாம் பரிசாக, 3,௦௦௦ ரூபாய்; மூன்றாம் பரிசாக, 2,௦௦௦ ரூபாய் வழங்கப்படும். இத்தகவலை ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை