மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்றம்: ஆர்ப்பாட்டம்
20-Jul-2025
பு.புளியம்பட்டி, பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 128 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் சுவர்களை இடித்து மாற்றம் செய்ததாகவும், காம்பவுண்ட் சுவர் கட்டி சாலையை ஆக்கிரமித்து தகர சீட்டு வைத்து, ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் தாசில்தார் ஜமுனா ராணி முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழர்கள், நா.த.க.,வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நீடித்தது. சப்-கலெக்டர் சிவானந்தம், மாவட்ட அகதிகள் மறுவாழ்வு தனி தாசில்தார் பானுமதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சப்- கலெக்டர் உத்தரவு இல்லாமல் அகற்றப்படாது. முகாமில் பதிவு இல்லாத நபர்கள் குறித்து பட்டியல் கொடுத்தால், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதற்கிடையே, ஆக்கிரமிப்பு அகற்றிய போது எதிர்ப்பு தெரிவித்த, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த அருள்குமார், 35, என்பவர் தின்னரை குடித்ததால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
20-Jul-2025