உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காங்கேயம் :திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி, கரட்டுப்பாளையம் முருகன் மஹாலில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.நகராட்சி தலைவர் கனியரசி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முகாமை பார்வையிட்டார். பின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். பின், மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திருப்பூர் மாவட்ட துணை செயலர் முத்துக்குமார், நகர செயலர் முருகானந்தம், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மனோகரன், காங்கேயம் தாசில்தார் மோகனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.