உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவன்மலை கோவிலில் நாளை நடையடைப்பு

சிவன்மலை கோவிலில் நாளை நடையடைப்பு

காங்கேயம்; நாளை சந்திரகிரஹணம் நிகழ்வதால், சிவன்-மலை சுப்ரமணியசுவாமி கோவில் நடை அடைக்கப்படுகிறது. இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மார்ச், 3ம் தேதி (நாளை) மதியம், 3:20 மணிக்கு சந்திரகிரஹணம் ஆரம்பித்து மாலை, 6:47 மணிக்கு முடிகிறது. இதனால் கோவிலில் அன்-றைய தின உச்சி கால பூஜை, 11:30 மணிக்கு நடந்து, 12:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்-படும். அதன் பிறகு பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை நாளை மறுநாள் (புதன்) காலை, வழக்கம்போல் நடை திறக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ