விடுதியில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
பவானி:ஆப்பக்கூடல் அருகே, விடுதியில் தங்கியிருந்த கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கேசவ நாராயணன். 46. இவரது மகன் சரண் ஆதித்யா, 16, ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் உள்ள விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு இன்ஸ்ட்மன்டேஷன் கன்ட்ரோல் இன்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த, 18ம் தேதி கல்லுாரி துவங்கியது.பின்னர், 24ம் தேதி கல்லுாரி விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்ற சரண் ஆதித்யா நேற்று முன்தினம் மாலை விடுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அறையில் தங்கி இருந்த அவர், நேற்று மாலை யாரும் இல்லாதபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.மாணவர் உடலை மீட்ட ஆப்பக்கூடல் போலீசார், உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.