உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தந்தை ஓட்டிய வேனில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

தந்தை ஓட்டிய வேனில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

பெருந்துறை:ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல், 49; தனியார் பள்ளி வேன் டிரைவர். இவர் மனைவி ரம்யா, 33; கணவர் ஓட்டும் வேனில் அட்டெண்டராக உள்ளார். இவர்களின் மகன் ஹரிஹரன், 15; திண்டல் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தான். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், தந்தையுடன் பள்ளி வேனில் சென்றான். வேப்பம்பாளையம் அருகில் வளைவில் திரும்பியபோது, ஹரிஹரன் சாலையில் விழுந்தான். இதில் வேன் ஏறியதில் பலத்த காயமடைந்தான். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தான். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !