மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2026
கோபி: கோபி வைரவிழா (நிதியுதவி) மேல்நிலைப்பள்-ளியில், பொங்கல் மற்றும் குடியரசு தின விழா போட்டி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். உறியடித்தலில், 20 மாணவர், இசை நாற்காலியில், 17 பேர், அடிப்-பந்து போட்டியில், 28 பேர், ஓவியப்போட்டியில், 13 பேர், பேச்சுப்போட்டியில் ஐந்து மாணவர்கள் பங்கேற்றனர். உறியடித்தல் உள்ளிட்ட சில போட்டிகளில் ஆசி-ரியர்களும் கலந்து கொண்டனர். ஐந்து வித போட்டிகளில், முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
13-Jan-2026