உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலை சுத்தம் செய்த மாணவர்கள்

வாய்க்காலை சுத்தம் செய்த மாணவர்கள்

ஈரோடு:ஈரோடு-கரூர் சாலை பஞ்சலிங்கபுரத்தில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் குப்பை குவிந்து கிடந்தது. இதை பஞ்சலிங்கம் உழவன் மன்றம் சார்பில் துாய்மைபடுத்தும் பணி நடந்தது. வாய்க்காலில் வீசப்பட்டிருந்த மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து, மொடக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பஞ்சலிங்கபுரத்தில் துவங்கி, 2 கி.மீ., துாரம் வரை என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் மற்றும் விவசாயிகள் என, 50க்கும் மேற்பட்டோர் துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை