மேலும் செய்திகள்
மேரக்காய் பந்தல் 50 சதவீதம் மானியம்
06-Aug-2026
ஈரோடு:அந்தியூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் நந்தினி வெளியிட்ட அறிக்கை:தோட்டக்கலை துறை மூலம், பிரதம மந்திரி கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தில், அந்தியூர் வட்டார விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் நிரந்தர பந்தல் அமைத்து, கொடி வகை காய்கறி பயிர்களை பயிர் செய்ய மானியம் பெறலாம். பாகற்காய், புடலை, சுரைக்காய், பீர்க்கன்காய், கோவைக்காய், அவரை, பீன்ஸ் போன்ற பயிர் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படுகிறது. நிரந்தர பந்தல் அமைப்பு மூலம் தரமான விளை பொருட்கள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறையும். எளிதான அறுவடை, அதிக மகசூல் பெறலாம்.ஒரு ெஹக்டேருக்கு திட்ட மதிப்பீடு, 6 லட்சம் ரூபாய். அதில், 50 சதவீதமாக, 3 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். நில தயாரிப்பு, கல் அல்லது சிமென்ட் துாண்கள், ஜீ.ஐ., கம்பிகள், விதை அல்லது நாற்றுக்கள் நடவுப்பணி, தொழிலாளர்கள் செலவுக்கு மானியம் வழங்கப்படும். அப்பகுதி தோட்டக்கலை துறை அதிகாரி ஆய்வுக்கு பின், கிரிஷி மேப்பர் செயலியில் பதிவேற்றப்படும். நுண்ணீர் பாசன அமைப்புடன் செயல்படுத்துவதன் மூலம் அதிக லாபம் பெறலாம். விவசாயிகள் தங்கள் சிட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல், புகைப்படம், அடங்கல், நில உரிமை புலப்படம், வங்கி கணக்கு புத்தகம், நிலப்பத்திரம் ஆகிய ஆவணங்களுடன், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு கூறியுள்ளார்,
06-Aug-2026